விருத்தாசலம் நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கோடைகால நீர், மோர், பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.முன்னதாக, பெரியார்நகர், தென் கோட்டை வீதி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட குடிநீர் பந்த லை, சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மற்றும் துணை செயலாளர் வாசு ஆகியோர் கலந்துகொண்டு.
பொதுமக்களுக்கு திறந்து வைத்து,பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி , குளிர்பானங்கள் வழங்கினர்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில், நகர கழக செயலாளர் அப்பாஸ், நகர நிர்வாகிகள் பாபு, பிரசாந்த், அபி ராஜா, மற்றும் நகர நிர்வாகிகளால் அமைக்கப்பட்ட இந்த கோடைகால நீர் மோர் பந்தல் விழாவில், ஏராளமான பொதுமக்கள் நீர்மோர், தர்பூசணி, இளநீர் குளிர்பானங்களை வாங்கி பருகிச் சென்றனர் . இதில், மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

