in

பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் மும்மொழி கல்விக் கொள்கையை கண்டித்து திருக்கனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் மும்மொழி கல்விக் கொள்கையை கண்டித்து திருக்கனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரியில் அமல் படுத்தப்படுள்ள மும்மொழிக் கொள்கையை கண்டித்தும் புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் திருக்கனூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ள மும்மொழி கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல்,டீசல் விலையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் சமாதான பேச்சு நடத்தினர், இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிய படி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

What do you think?

தஞ்சையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மினி பேருந்துகளின் அராஜகம்

திருவாடானை அருகே விபத்து: கும்மிப் பாடகரான கல்லூரி மாணவர் பரிதாப மரணம்!