in

நாகையில் ‘We The Leaders’ அமைப்பின் தொடக்க விழா

நாகையில் ‘We The Leaders’ அமைப்பின் தொடக்க விழா

 

நாகையில் ‘We The Leaders’ அமைப்பின் தொடக்க விழா – பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள ‘We The Leaders’ என்ற புதிய அமைப்பின் தொடக்க விழா நாகப்பட்டினத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்சியில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்சியை வெளிப்படுத்தினர்.

தொடக்க விழாவில் ‘We The Leaders’ அமைப்பின் கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து நிர்வாகிகள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.

இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு, சமூக சேவை ஆகியவற்றில் அமைப்பு முக்கியத்துவம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய அமைப்பின் தொடக்கத்தை முன்னிட்டு நாகை புதிய பேருந்து நிலைய பகுதி விழாக்கோலம் பூண்டது.

What do you think?

எரிவாயு விலை குறைப்பு கோரி நாகையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி புறவழி சாலை பணிக்கு எதிர்ப்பு: மாங்காய்களுடன் விவசாயிகள் மனு