in

மதுரவாயல் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்க முயன்ற தவெக மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு

மதுரவாயல் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்க முயன்ற தவெக மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு

இரு தரப்பினும் மோதிக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரல்

சென்னை மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 147 வது வார்டு கங்கா நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று கோடைகால தண்ணீர் பந்தல் சட்டமன்ற உறுப்பினரை வைத்து திறக்கப்பட ஏற்பாடுகள் நேற்று இரவு செய்யப்பட்டுள்ளது .

அப்பொழுது அங்கு வந்த திமுக 147 வது வார்டு வட்டச் செயலாளர் மாதவன் வீடு அருகாமையில் உள்ள நிலையில் தண்ணீர் பந்தல் இந்த இடத்தில் அமைக்க கூடாது எனவும் கூறியுள்ளார் .

அப்பொழுது திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது இந்த நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் வரை சென்றுள்ளது அது குறித்தான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது .

இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மதுரவாயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இன்று சட்டமன்ற உறுப்பினர் தண்ணீர் பந்தலை திறந்து வைக்க உள்ள நிலையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

What do you think?

அருள்மிகு கண்ணப்பநாயனாா் ஆலய ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

மகளிர் காவல் நிலையத்தில் கைகலப்பு: பெண் ஆய்வாளர் மீது அடி விழுந்ததால் பரபரப்பு, 2 பேர் கைது