தஞ்சை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ரேவதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்
பெருமைமிகு தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணி ஏற்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என தஞ்சை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ரேவதி தெரிவித்தார்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
இதற்கு முன்பு பல மாவட்ட ஆட்சியர்கள் நல்ல விஷயங்கள் செய்து இருக்கிறார்கள் அவற்றை தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை செய்வேன்.
இது முக்கியமான கடமை பெருமை என்பதை தாண்டி பொறுப்பு என்பதை புரிந்து கொண்டுள்ளேன்
அரசாங்கத்தின் நல திட்டங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது வேளாண்மை சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயிகளுக்கு என்ன செய்வது முந்தைய ஆட்சியர்கள் என்ன செய்தார்களோ அதை அப்படியே கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியை நான் எடுப்பேன் என்றார்


