in

ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வம் போட்டி


Watch – YouTube Click

ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வம் போட்டி

 

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 6-வதாக மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுர தொகுதியில் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது.

அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்திருந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒபிஸ்க்கு எதிராக ஓபிஎஸ்கள் களமிறங்கியுள்ளனர்.

மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நேற்று முன்தினம் வரை 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அதாவது இறுதி நாளான நேற்று கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் என்பவர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதனால், ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, சுயேட்சையாக ஓபிஎஸ் களமிறங்கும் நிலையில் அவர் பெயரில் மேலும் 5 பேர் போட்டியிடுவதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுயேச்சைகளுக்கு வேட்புமனு பரிசீலினை முடிந்த பிறகே சின்ன வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி காலமானார்

பணம் இல்லாததால் தேர்தலில் போட்டி இல்லை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்