in

ராகுல் காந்திக்கு எதிராக டி ராஜா மனைவி போட்டி


Watch – YouTube Click

ராகுல் காந்திக்கு எதிராக டி. ராஜா மனைவி போட்டி

கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடுகிறார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான இவர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

கேரளத்தில் பிறந்த இவர், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். இதுபோல் திருவனந்தபுரம் தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்ததலைவர் பன்னியன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்
பட்டுள்ளார்.

இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரி கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. எனினும் கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் எதிரெதிராக போட்டியிடுகின்றன.

கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 15 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இதனால் அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. இதுபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள இடது ஜனநாயக முன்னணியும் இம்முறை அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய சாந்தன் மறைந்தார்

சமவேளை சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் பேரணி