in

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பேரணி


Watch – YouTube Click

நாகையில் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணி கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மணிகண்டன், சிவக்குமார் ஆகியோர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் பேரணியானது மேளதாளத்துடன் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பாடலுடன், நம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம் என்ற விழிப்புணர்வும் முழக்கங்கள் முழங்க, பதாகை ஏந்தி, தெற்கு வீதி,கீழ வீதி வழியாக ஊர்வலமாக சென்று கீழ்வேளூர் கடைத் தெருவில் முடிவடைந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

வட கொரியாவில் வினோதம் நாய் வளர்க்க தடை ஆனால்

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு எருமையால் கிராம மக்கள் அச்சம்