in

மத்திய அரசை கண்டித்து திமுக ஊர்வலம் ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


Watch – YouTube Click

மத்திய அரசை கண்டித்து திமுக ஊர்வலம் – ஆர்ப்பாட்டம்..ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை இன்று நடத்தின.புதுச்சேரி மாநில திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் தலைமையில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊர்வலத்தில் பங்கேற்க புதுச்சேரியின் பல்வேறு தொகுதிகளில் இருந்து அணி அணியாக தொமுச நிர்வாகிகள், திமுகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள்

தாவரவியல் பூங்கா முன்பு திரண்டனர்.அங்கிருந்துதொழிலாளர் முன்னேற்றக் சங்க கவுரவ தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமையில் ஊர்வலம் புறப்பட்டனர். ஊர்வலம் அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று ஆம்பூர் சாலையில் நிறைவடைந்தது. அங்கு மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என பிரதமர் மோடி வாக்குறுத அளித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவைக்கு சுயாட்சி தருவோம் என்றும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவை கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றும் கூறினர். ஆனால் ஒன்றுகூட நடடைபெறவில்லை. துறைமுகம், விமான நிலையத்தை விரிவாக்குவோம், சுற்றுலாவை பெருக்குவோம் என கூறினர். துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். பிற மாநிலங்களில் செய்வதைக்கூட புதுவையில் செய்யவில்லை. பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன்கடைகள் இயங்குகிறது.

பிரதமரே ரேஷன்கடைகள் மூலம் பொருட்களை விநியோகம் செய்வதாக புகைப்படம் வெளியாகிறது. நாம் இந்தியாவில் இல்லை, வெளிநாட்டில் வாழ்வதாக நினைக்க வேண்டியுள்ளது. எத்தனையோ முறை புதுவை ஆட்சியாளர்கள் ரேஷன் கடைகளை திறக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். மத்திய பாஜக அரசுக்கு இந்த கோரிக்கையை நிறைவேற்ற மனசில்லை. தமிழகத்தில் ரூ.பல லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியாக பெறுகின்றனர். அதில் 21 சதவீதம்தான் திருப்பி தருகின்றனர். புதுவையில் பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியையும் திருப்பி அளிப்பதில்லை. இதனால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழ ங்குவோம் என்றனர். 3 ஆண்டில் ஆயிரம் பேருக்குக்கூட வேலை வழங்கவில்லை.

இந்த அரசு அனைத்து துறையிலும் தோல்வி கண்டுள்ளது. தமிழகத்தில் பட்டய, பட்டதாரி ஆசிரியர்களை சீனியாரிட்டி அடிப்படையில் வேலைக்கு எடுக்கின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். புதுவையில் அந்த கொள்கையை மாற்றி வேலைக்கு அனுப்புகின்றனர். இதனால் ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள் பலர் வேலையின்றி காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டூ மத்திய அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வசூலிப்பதை தடுத்து ரத்து செய்துள்ளது. ஏற்கனவே வாங்கிய தொகையையும் அரசு கஜானாவில் சேர்க்க உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் பத்திரம் மூலம் மத்திய பாஜக அரசு நுõதன ஊழலை செய்து வந்தது.

இதில் கிடைத்த பணம் மூலம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்ப்பது, அமைச்சரவையை மாற்றுவது, கட்சியை துவம்சம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். அதற்கெல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்படுபவர் கூட்டணி கட்சியாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் அவரின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடவேண்டும்.

நம்மை பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை கட்சித்தலைமை சுட்டிக்காட்டியுள்ளது. ஓரிருமாதங்களில் தேர்தல் வர உள்ளது. கட்சியினர் முழு ஆற்றலையும் பயன்படுத்தி புதுவை தொகுதி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக முதல அமைச்சர் ரங்கசாமி, கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதாக கூறி வருகிறார். இந்த ஆலையை அரசே திறக்க வேண்டும். தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. அப்படி ஒப்படைத்தால் அதை எதிர்த்து திமுக கோர்ட்டுக்கு செல்லும் என தெரிவித்தார்…


Watch – YouTube Click

What do you think?

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர்உருவ பொம்மை எரிப்பு – தஞ்சையில் பரபரப்பு

கரூரில் பிரசிதிபெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கொடியேற்றம்