in

இரண்டு லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் சமரச கொடி


Watch – YouTube Click

இரண்டு லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் சமரச கொடி

கடலூரில் வள்ளலார் கால்பதித்த பகுதியில் கடலூர் பீச்ரோடு பகுதியில்
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் கோவிலாக உள்ளது கோவிலில் புதிய கொடிமரம் நிறுவும் விழாவில் தவ யோகி சாது சிவராமனார் அவர்கள் பங்கேற்பு அகவல் பாடி. சன்மர்க்க கொடி ஏற்றினார்.

இன்நிகழ்ச்சியில் துறவி. குணா சுவாமி CK. குழமன தாளாளர் திரு.CK. அசோக்குமார் அவர்களும் பங்கேற்ப்பு.

கடற்கரை சாலையில் அமைந்துள்ள கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் இன்று இரண்டு லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் சமரச கொடி ஏற்றும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துறவி குணா சாமி அவர்களும் சிகே கல்வி நிறுவனங்களின் தாளாளர் சி கே அசோக் குமார் அவர்களும் தலைவர் சிவனேசன் அவர்களும் செயலாளர் சபாபதி அவர்களும் பொருளாளர் மணிவண்ணன் அவர்களும் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்று விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சத்தை பற்றி தவத்திரு ராஜயோகி பிரம்மஸ்ரீ சாது சிவராமன் அவர்கள் நம் நடுநிலை செய்தி ராஜ் தொலைக்காட்சிக்கு அளித்த செய்தியில் கூறியதாவது இந்த உலகில் மதமும் சமயமும் தோன்றின காலத்தில் ஆன்மாவின் அனுபவத்தில் வள்ளலார் அவர்கள்1874 ஆம் ஆண்டு மேட்டுக்குப்பத்தில் சமரச சன்மார்க்க கொடியை ஏற்றினார்.

மேலும் வள்ளலார் அவர்கள் அருட்பா எழுதிய காலத்தில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் என்பவர் இது அருட்பா அல்ல மறுப்பா என்று வள்ளலார் மீது வழக்கு தொடர்ந்தார் கடலூர் சில்வர் பீச் செல்லும் சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருள் தந்தை வள்ளலார் அவர்கள் வந்த போது வழக்கு கொடுத்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும் அவர் வழக்கறிஞரும் வள்ளலாரை
கை கூப்பி வணங்கினர் இக்காட்சியை கண்ட நீதியரசர் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

இத்தகைய சிறப்புமிகுந்த இந்த பகுதியில் வள்ளலார் கால்பதித்த இடமே இன்று கடலூர் கடற்கரை சாலையில் சமரச சுத்த சன்மார்க்க கோவிலாக உள்ளது இத்தகைய சிறப்புமிகு இக்கோவிலில் இன்று 21 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரத்தில் சமரசக்கொடி சாது சிவராமனாரால் ஏற்றப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் கண்டு களித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

மக்கள் பிரதிநிதியாவதே உள் விருப்பம் தமிழிசை பேட்டி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா