மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு மீன் வரத்து அதிகரிப்பு
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்ததை அடுத்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்
இந்த நிலையில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு மீன் வரத்து எதிர்பார்த்ததை விட அதிக அளவு கிடைத்துள்ளது
இதனால் அதிக லாபம் கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் கரை திரும்பிய மீனவர்களுக்கு மீன்களின் விலை குறைந்த விலையில் கிடைத்ததால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்
மேலும் இறால், நண்டு உள்ளிட்டவற்றை வாங்கும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு குறைந்த விலைக்கு வாங்குவதாக மீனவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்
இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்


