in

உண்மையை உடைத்த நடிகை லீனா நாயர்…வைரல் இன்ஸ்ட போஸ்ட்

உண்மையை உடைத்த நடிகை லீனா நாயர்…வைரல் இன்ஸ்ட போஸ்ட்

நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி இஸ்ரோ மையத்துக்கு சென்றவர் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்லும் வீரர் நான்கு பேரை அறிமுகம் செய்தார்.

இத்திட்டத்தில் இந்திய விமான படை பிரிவை சேர்ந்த 20 பேர் அடங்கிய குழுவில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர் . 140 கோடி மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் இந்த நான்கு வீரர்கள் நிறைவேற்றுவார்கள் என்று மோடி கூறினார்.

அவர்களில் ஒருவர் பெயர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர். இவர் தமிழில் அனேகன் என்ற படத்தில் நடித்த நடிகை லீனா நாயரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே அபிலாஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றவர். பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் சென்ற மாதம் நடைபெற்று இருந்தாலும் தற்போது தான் அறிவிப்பை தனது வலைப்பக்கத்தில் நடிகை அறிவித்தார். இந்நிலையில் நேற்று லீனா இன்ஸ்டா வில் பகிர்ந்துள்ளதாவது விண்வெளிக்குச் செல்ல உள்ள வீரர்களை சந்தித்து பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றியது நாட்டுக்கு கிடைத்த பெருமையும் கௌரவமும் ஏனெனில் இந்த குழுவில் இருப்பவர் எனது கணவர் பாலகிருஷ்ணன்.

கடந்த மாதம் தான் எங்களுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதுவரை ரகசியமாக வைத்திருந்த எங்கள் திருமணத்தை இந்த கௌரவிக்க சூழ்நிலையில் அனைவருக்கும் தெரியப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

What do you think?

முன்னனி நடிகர்களுக்கு கொடுக்கும் சான்ஸ்சை பாலாவுக்கு கொடுங்கள் ரசிகர்கள் வேண்டுகோள்

அரசு மருத்துவமனை புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா