பிறந்தநாள் சிறப்பு முப்பெரும் விழா கோலாகலமாக கத்தாரில் கொண்டாடபட்டது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் சேர்ந்த சம்சுதின் சாதீக்பாஷா ஒருங்கிணைப்பாளர் கத்தாரில் வரலாறு படைத்த உலகின் முதல் முதலவர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு அரசுக் கொறடா R. சபரிநாதன் பங்கேற்று சிறப்பித்தார்! தோஹா, கத்தார் – ஜூன் 12, 2026 முதலவர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, TVK Qatar சார்பில் கத்தாரில் உலகின் முதல் பிறந்தநாள் சிறப்பு முப்பெரும் விழா சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் அரசுக் கொறடாவும், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. R. சபரிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
விழாவின் முதல் நிகழ்வாக TVK Qatar மற்றும் Naseem Healthcare இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர். மருத்துவ முகாமை பார்வையிட்ட . சபரிநாதன் அவர்கள், பொதுமக்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் கலந்துரையாடி, சமூக நலனை முன்னிறுத்தும் இந்த முயற்சியை பாராட்டினார்.
தொடர்ந்து மாலை நடைபெற்ற முப்பெரும் விழாவில், தளபதி விஜய் அவர்களின் மக்கள் செல்வாக்கை மையமாகக் கொண்ட சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. “தளபதி விஜயின் மகத்தான மக்கள் ஆதரவிற்கு முக்கிய காரணம் அவரது குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களா அல்லது அதிரடி ஆக்ஷன் நடிப்பா?” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், இந்திய சமூக நல நிதியம் (ICBF) காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 15 மீனவ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வாக “தளபதி வெற்றிச் சுடர் விருது 2026” வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக சேவை, கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் மனிதநேயப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் திரு. மணிபாரதி, முனைவர். வாசுகி சத்தியபாபு மற்றும் திருமதி. லட்சுமி சொக்கலிங்கம் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்புரையாற்றிய மாண்புமிகு திரு. R. சபரிநாதன் அவர்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழி பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையைப் பேணிப் பாதுகாத்து வருவது பெருமைக்குரியது என்றும்,
சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் TVK Qatar உறுப்பினர்களுக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
நிகழ்வில் இந்திய சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், TVK நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கத்தார் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மருத்துவ சேவை, நலத்திட்ட உதவி மற்றும் சமூக கௌரவிப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற இந்த முப்பெரும் விழா, வெளிநாட்டு தமிழர்களின் ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியதோடு, முதலவர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிய உலகின் முதல் வெளிநாட்டு பிறந்தநாள் சிறப்பு முப்பெரும் விழாவாக வரலாற்றில் இடம்பிடித்தது.

கத்தாரில் வரலாறு படைத்த உலகின் முதல் முதலவர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசுக் கொறடா R. சபரிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
300-பேருக்கு இலவச மருத்துவ முகாம் 15 மீனவ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் தளபதி வெற்றிச் சுடர் விருதுகள் வழங்கல்
உலகின் முதல் வெளிநாட்டு பிறந்தநாள் சிறப்பு முப்பெரும் விழாவாக இந்நிகழ்வு வரலாறு படைத்தது.


