in

காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா

காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா

 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பறவை காவடி கரும்புத் தொட்டில் அழகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெண்கள் உள்பட பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுடன் பறவை காவடி எடுத்தல் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மனுக்கு அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது மேலக் கால் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பால்குட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புரட்டாசி பொங்கல் திருவிழாவில் இன்று இரவு வைகை ஆற்றிற்கு சென்று கரகம் எடுத்து வருதல் மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோவில் முன்பு கும்மி பாட்டு பாடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

What do you think?

சிவ ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு

டோரதி’ படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு