in

குடிநீர் வழங்கிடக் கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் வழங்கிடக் கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

 

நாகை அருகே மகிழி கிராமத்திற்கு குடிநீர் வழங்கிடக் கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்: திருத்துறைப்பூண்டி – வேளாங்கண்ணி சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மகிழி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் கடந்த 2 மாதங்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து, அப்பகுதி கிராம மக்கள் மகிழி லாக்கடி பாலம் அருகே காலிக் குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​திருத்துறைப்பூண்டி – வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் வேதையன் கீழையூர் காவல் ஆய்வாளர் பேபி வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்திம்மாள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக டேங்கர் மூலம் தண்ணீர் வழங்கப்படும் எனவும் கூறியதை தொடர்ந்து அடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

What do you think?

புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா  கருடசேவை புறப்பாடு

நாகை மாவட்டத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு