in

தரங்கம்பாடியில் சுற்றுலா தின விழா!

தரங்கம்பாடியில் சுற்றுலா தின விழா!

 

தரங்கம்பாடியில் டென்மார்க் நாட்டினர் சுற்றுலா தினத்தை ஒட்டி கப்பல் மாதிரி வடிவமைத்து டென்மார்க்கில் இருந்து விமானம் மூலம் கொண்டு வந்து தரங்கம்பாடியில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

​மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, டென்மார்க் நாட்டிலிருந்து தரங்கம்பாடி டென்மார்க் நலச்சங்கம்  (Danish Tranquebar Association) சார்பில் தரங்கம்பாடிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது.  ​

கி.பி. 1620-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டிலிருந்து முதன்முதலில் தரங்கம்பாடி வந்தடைந்த டேனிஷ் கப்பலின் மாதிரி (Ship Model) ஒன்றை அந்த அமைப்பின் பிரதிநிதிகள் அழகிய வடிவில் அச்சு அசலாக வடிவமைத்து டென்மார்க்கில் இருந்து விமான மூலம் கொண்டு வந்து தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளனர்.

இது குறித்து  தரங்கம்பாடி டென்மார்க் நல சங்கத்தின் தலைவர் பவுல் பீட்டர்சன் பேசுகையில் :

“இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இடையே 400 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நல்லுறவு மற்றும் கூட்டுறவின் அடையாளமாக இந்த கப்பல் மாதிரியை நாங்கள் வழங்குகிறோம்.

டேனிஷ் மற்றும் இந்திய வரலாற்றை ஒருங்கிணைத்து வெளிப்படுத்தும் தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகத்திற்கு ஆதரவு அளிப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம்” என்று தெரிவித்தார்.

இரு நாடுகளின் வரலாற்று தொடர்பையும், இருதரப்பு நட்புறவையும் நினைவுபடுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது இந்த நிகழ்வில் கடல் சார் அருங்காட்சியகத்தின் நிர்வாகிகள் மற்றும் டென்மார்க்கில் இருந்து பவுல் பீட்டர்சன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட குழுவினர் வந்திருந்தனர். மேலும் தரங்கம்பாடி சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

What do you think?

புரட்டாசி மாதம் பௌர்ணமி சிறப்பு மகாயாகம்

நெல் நாற்று நடவு பணியில் ஈடுபடும் வட மாநிலத் தொழிலாளர்கள்