in

நவராத்திரி பண்டிகை கொலு பொம்மைகள் கண்காட்சி

நவராத்திரி பண்டிகை கொலு பொம்மைகள் கண்காட்சி

 

தஞ்சாவூரில் நவராத்திரி பண்டிகை கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ரேவதி தொடங்கி வைத்தார்.

கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ரேவதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் ஸ்ரீரங்கம் சேர்த்தி சேவை, சுக்ரீவர் யுத்தம், நவ திருப்பதி செட், ராவணன் போர், அஷ்ட பைரவர்கள், நவக்கிரகங்கள், தசாவதாரம் செட், அஷ்டலட்சுமி செட், காமாட்சி தங்கரதம் செட், குபேரன் செட், கிரிவலம் செட், கருடசேவை, நவ துர்க்கை, கிருஷ்ணர் விளையாட்டு, ஆண்டாள் திருமஞ்சனம், வரலெட்சுமி விரதம் செட், துலாபாரம் போன்ற கொலு பொம்மைகளும், ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பொம்மைகளும் கல்கத்தா களிமண் பொம்மைகள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிக்கோப்பா பொம்மைகள் என இக்கண்காட்சி மற்றும் விற்பனையில் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இக் கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் 31ந் தேதி வரை நடைபெறுகிறது, இக்கண்காட்சி வாயிலாக ரூ 40 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சக்திதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு கொலு பொம்மைகளை வாங்கிச் சென்றனர்.

What do you think?

தஞ்சாவூர் பெரிய கோவில் பிரதோஷ வழிபாடு

 புரட்டாசி மாத சதுர்த்தசி நடராஜர் அபிஷேகம்