திருவாவடுதுறை அபிஷேகத் திருநாள் நூல் வெளியீடு விழா
திருவாவடுதுறை ஆதீனத்தில் ஸ்ரீ ஞானமா நடராஜ பெருமான் அபிஷேகத் திருநாள் நூல் வெளியீடு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஆதீனத்தில் புரட்டாசி வளர்பிறை சதுர்தசி ஸ்ரீ ஞானமா நடராஜப் அபிஷேக விழா நடைபெற்றது.
பெரிய பூஜை மடம்,ஸ்ரீ ஞானமா நடராஜ பெருமான் சந்நிதியில் திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனைகள் பூஜை செய்தார்.

பின்னர் மகா சோமாஸ்கந்தர் கலைக்களஞ்சியம் என்ற நூலினை வெளியிட்டு அருளினார் முதல் நான்கு பிரதியை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் ஆதீனப் பொது மேலாளர் மனவழகன், சென்னை அண்ணாநகர் ஆதீன சைவ சித்தாந்த பயிற்சி மையப் பேராசிரியர் முத்துராமன், பெருந்துறை சைவ சித்தாந்த திருமுறை அமைப்பாளர் இராமசாமி, நூலாசிரியர் திருவாடுதுறை ஆதீன நூலகர் நாராயணசுவாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீமத் வேலப்பத் தம்பிரான் சுவாமிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


