ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
வீராணக் குண்ணம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் ஆலய ஜீரணத்தான அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வீராணக் குண்ணம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் ஆலய ஜீரணத்தான அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவானது 15 – ஆம் தேதி காலை விநாயகர் பூஜை, கலச பூஜை, கணபதி மற்றும் நவகிரஹ ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலையுடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து மகா பூர்ணாஷீதி செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து கலசங்கள் விமான கோபுர கலசத்திற்கு மேளதாளங்கள் முழங்க எடுத்து செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து. புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தனர் இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


