in

கிருஷ்ண ஜெயந்தி: கோபால கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம்

கிருஷ்ண ஜெயந்தி: கோபால கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம்

நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் தருமபதி கோசாலை மகாதேவன் கோபால கிருஷ்ணர் திருக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

விழாவையொட்டி முன்னதாக கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாதேவன் கோபால கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 56 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

What do you think?

The Ultimate Guide to Live Dealer Casino Sites

கிருஷ்ணாபுரம் கலை விநாயகர் கோவில் முதல் வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்