in

கோவையில் மிக பிரமாண்டமான மீன்கள் கண்காட்சி துவக்கம்

கோவையில் மிக பிரமாண்டமான மீன்கள் கண்காட்சி துவக்கம்

 

கோவையில் மிக பிரமாண்டமான மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் துவக்கம்.

கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையம் கோகுலம் பார்க் ஹோட்டல் எதிரே “கோயமுத்தூர் அக்வா பார்க்” என்ற பெயரில் தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் இன்று துவங்கப்பட்டுள்ளது.

இந்த மீன்கள் கண்காட்சி அரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் மீன்கள் மற்றும் டேம் மீன்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் அளவில் மிக சிறிய மீன்கள் முதல் 40 கிலோ மிகப்பெரிய மீன்கள் வகை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு அம்சங்களாக கைகளில் அமரும் பறவைகள் மற்றும் நெருப்புக்கோழிகள் இந்த அரங்கில் இடம் பெற்றுள்ளன. நமது கோவை மாநகரில் இதுவரை சில குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்து வருகிறது.

இந்த “கோயம்புத்தூர் அக்வா பார்க்” மீன் கண்காட்சி அரங்கம் நமது கோவையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழப்போகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசிக்கும் இடமாக இந்த “கோயம்புத்தூர் அக்வா பார்க்” மீன்கள் கண்காட்சி அரங்கம் அமைந்துள்ளது.

இந்த கண்காட்சி அரங்கை காண பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6:00 மணி வரை வரலாம் என்றும், குழந்தைகளுக்கு ரூபாய் 200 மற்றும் பெரியவர்களுக்கு ரூபாய் 300 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் “கோயம்புத்தூர் அக்வா பார்க்” நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று இந்த கண்காட்சி அரங்கை கோவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் இந்த கண்காட்சி அரங்கிலேயே உணவுக் கூடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.

இந்த கண்காட்சி வளாகம் முழுவதும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் “கோயமுத்தூர் அக்வா பார்க்” மீன்கள் கண்காட்சி வளாகம் நமது கோவை மக்களின் விடுமுறை தினங்களை இனிமையாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. வந்து பாருங்கள், கண்டு மகிழுங்கள்.

What do you think?

களிமண்குண்டு காந்தாரி அம்மன் ஆலயத்தில் 156ஆம் ஆண்டு முளைக் கொட்டு பூக்குழி பெருவிழா

iDEAL tegoed bij online gokken wat je moet weten