in

விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

 

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன் பிடி விசைப்படகு முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரணத் தொகை போல இந்த ஆட்சியிலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31ஆம் தேதியிலிருந்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து தங்கச்சிமடத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

What do you think?

ரெஸ்ட்ரோபார் உள்ளிட்ட மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் போராட்டம்

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து இளம்பெண் விபரீத முடிவு!