in

ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு தழுவிய மறியல் போராட்டம்

ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு தழுவிய மறியல் போராட்டம்

 

ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு தழுவிய மறியல் போராட்டம்
மதுரையில் ரயில் நிலையம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்.

தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் நாடு தழுவிய மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் இன்று (ஆக.10) நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரையில் கட்டபொம்மன் சிலையிலிருந்து தொழிலாளர்கள் பங்கேற்கும் பேரணி புறப்பட்டு, ரயில் நிலையம் முன்பு மறியல் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் சிஐடியு, எல்பிஎஃப், ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டியுடிசி, யூடியூசி, எச்எம்எஸ், எம்எல்எப், ஏஐயூடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

முக்கியக் கோரிக்கைகள் தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்டம் 2025-ஐ திரும்பப் பெற வேண்டும். விதைகள் சட்டம் 2025-ஐ திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்.

தொழிலாளர் உரிமை, தொழிற்சங்க உரிமை, வேலைநிறுத்த உரிமை மற்றும் கூட்டு பேர உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
இபிஎப்-95 ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட திட்டப் பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.42 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்.
கிராமப்புற பொருளாதாரத்தைப் பாதிக்கும் இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும்.

கல்வியை தனியார்மயமாக்கி வணிகமயமாக்கும் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க தேசிய நிதி ஆணையத்தை ஏற்படுத்தி உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்புமதுரையில் நடைபெறும் போராட்டத்தை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தொடங்கி வைத்து பேசினார் .

போராட்டத்திற்கு எல்பிஎப் சி. கருணாநிதி, சிஐடியு மாநிலச் செயலாளர் இரா. லெனின், எச்எம்எஸ் வீ. பாதர் வெள்ளை, ஐஎன்டியுசி கே. ராஜசேகரன், எம்எல்எப் மாநிலத் துணைத் தலைவர் எஸ் மகபூப் ஜான், மாவட்ட நிர்வாகி மு. சுப்பிரமணியராஜ், யூடியூசி பி. ஆண்டி, அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் பி. பாண்டியன் ஆகியோர் தலைமை வகிக்கித்தனர்.

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்னர் மேலும் மறியலில் ஈடுபட்ட சுமார் ஆயிரக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

What do you think?

வேலூர் தங்க கோவில் நாராயணி பீட சக்தி அம்மா அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்

லோகேஷின் ஹீரோ அவதாரம்… சூர்யா கொடுத்த பாராட்டு!