16 ஆண்டுகளாக அய்யனார் கோயிலுக்குள் சாமி கும்பிட அனுமதிக்கவில்லை மாவட்ட ஆட்சியர் தலையீட்டால் மக்கள் கோயிலுக்குள் சென்று ஆடி வெள்ளியில் பொங்கல் வைத்து உற்சாகத்துடன் வணங்கி மகிழ்ந்தனர்
பட்டியலின மக்களை 16 ஆண்டுகளாக அய்யனார் கோயிலுக்குள் சாமி கும்பிட அனுமதிக்கவில்லை மாவட்ட ஆட்சியர் தலையீட்டால் மக்கள் கோயிலுக்குள் சென்று ஆடி வெள்ளியில் பொங்கல் வைத்து உற்சாகத்துடன் வணங்கி மகிழ்ந்தனர்:–
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது அய்யனார் கோயில் இங்கு கடந்த 16 ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களை சாமி கும்பிட கோயிலின் டிரஸ்டியாக உள்ள தட்சிணாமூர்த்தி என்பவர் தடுத்து உள்ளார்.இதனால் அய்யனாரை குல தெய்வமாக வணங்கும் பட்டியலினத்தவர் தங்கள் வேண்டுதலை கூட நிறைவேற்ற முடியாமல் சங்கடத்திற்கு உள்ளாகி கோயிலின் வெளியே நின்று 16 ஆண்டுகளாக சாமி கும்பிட்டு வந்துள்ளனர் இதனையொட்டி தாங்கள் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட அனுமதி கேட்டு பல முறை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர் ஆனால் 16 ஆண்டுகள் கழித்து தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பேச்சுவார்த்தை நடத்தி பட்டியலினத்தவர்கள் கோயிலுக்குள் சாமி கும்பிட அனுமதி பெற்று தந்ததால் அப்பகுதி மக்கள் 16 ஆண்டுகள் கழித்து அய்யனார் கோயிலுக்குள் ஆடி வெள்ளிகிழமை சென்று அய்யனாரை வழிப்பட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர் 16 ஆண்டு கால தங்கள் வேண்டுதல் கணவை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி பட்டியலின மக்களும் குலதெய்வக்காரர்களும் நன்றி தெரிவித்தனர்.


