வாடிக்கையாளர் விவரங்களை தவறாக பயன்படுத்தியதாக புகார்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் கடந்த 2023-ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்திற்கு ஸ்ரீராம் நிதியில் கடன் பெற்று, அதனை முழுமையாக செலுத்தி NOC சான்றிதழும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது HDFC வங்கியில் சொந்த தேவைக்காக கடன் பெற விண்ணப்பித்துள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள், ஏற்கனவே ஸ்ரீராம் நிதியில் ரூ.50,000/- கடன் பெற்று தவணை செலுத்தாததால் CIBIL Score குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணதாசன் நேரில் ஸ்ரீராம் நிதி மேலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தெளிவான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் பணம் வழங்காமல் கடன் வழங்கியது போல் சிவில் பிரச்சனை உள்ளதாக ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் அலுவலகத்தில் திரண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை கண்டதும் தொடர்ச்சியாக ஸ்ரீராம் நிறுவனம் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து தன்னுடைய CIBIL அறிக்கையை ஆய்வு செய்ததில், 21.03.2026 அன்று அவரது பெயரில் ரூ.50,000/- கடன் பதிவாகி, மூன்று அவனைத் தொகை செலுத்தப்பட்டு தற்போது உள்ள EMI நிலுவையும் Outstanding-ம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து கண்ணதாசன் கூறுகையில், “நான் ஸ்ரீராம் நிதியிடம் எந்த கடனும் பெறவில்லை. எனது அனுமதியின்றி பெயரில் கடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் CIBIL Score பாதிக்கப்பட்டு புதிய கடன் கிடைக்காமல் குடும்பத்தில் பிரச்சனையும், மனஉளைச்சலும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


