செஞ்சி வேளாண்துறை அலுவலகத்தில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு
கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளுக்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வேளாண்துறை அதிகாரிகள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் சுற்றுவட்டார பகுதிகளில் எல்-நினோ காலநிலை மாற்றத்தால் போதிய மழை இல்லாததால் கடும் வரட்சி ஏற்பட்டு வருவதால் நீர்நிலைகள் முற்றிலும் நீர்வற்றி போதிய பாசன வசதி கிடைக்காமல் நெல் பயிர்கள் கரும்பு மற்றும் மணிலா உள்ளிட்டவைகள் நீரின்றி கருகி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் தலைமையில் செஞ்சி வேளாண்மை துறை அலுவலகத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆட்டோ மூலம் ஒலிப்பெருக்கி கொண்டு விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் மற்றும் மாவட்ட வேளான் இணை இயக்குநர் சுரேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கி விவசாயி பயிர் காப்பீடு செய்யும் விழிப்புணர்வு வாகனத்தை
தொடக்கி வைத்தனர்.
இதனை அடுத்து செஞ்சி மற்றும் மேல்மலையனூர் பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள் கிராமம் கிராமமாக சென்று ஆட்டோ ஒலிப்பெருக்கி மூலம் விவசாயிகள் மத்தியில் பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி விவசாயிகள் பயன்பெற அறிவுறுத்த பட்டு வருகின்றனர்.

