மருத்துவக் கழிவு அகற்றலில் முறைகேடு; மருத்துவர்கள் நூதன மனு
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட முழுவதிலும் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கான உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதாகும்.
இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும் கூறி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகளை எப்படி அகற்றப்படுகிறது என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மதுரை சேர்ந்த மருத்துவர்கள் மருத்துவக் கழிவுகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக பேசிய மருத்துவர்கள் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து பெறப்படும் மருத்துவ கழிவுகள் எங்கு கொட்டப்படுகிறது என தெரியவில்லை நீர் நிலைகளில் தொடர்ந்து கொட்டப்படுவதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் நிலை உள்ளது.
இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் குளறுபடியாக பதிலளிப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டால் கும்மிடிப்பூண்டியில் எரிப்பதாகவும் எடப்பாடியில் எரிப்பதாகவும் குளறுபடியான தகவல்களை தருகிறார்கள்
எனவே இது போன்ற மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் மதுரையில் மாநகர் பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகளை ஆலைகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்


