in

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆடி ஞாயிறு சிறப்பு தரிசனம்

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆடி ஞாயிறு சிறப்பு தரிசனம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீகத் திருத்தலமான ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அங்களாம்மனை வழிபட்டு வருகின்றனர்.

ஆடி மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.இதனை அடுத்து அங்காளம்மனுக்கு பட்டு உடுத்தி அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

ஆடி மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் அங்காளம்மன் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்து கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருப்பதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அங்களாம்மனை வழிபட்டு வருகின்றனர்.

What do you think?

செஞ்சியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்

மீன்பிடி வலையில் சிக்கிய 100 கிலோ அரிய வகை கடல் ஆமை