ஆட்டுடன் நூதன போராட்டம்; அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றித்திற்கு உட்பட்ட தேவூர் ஊராட்சி காந்திநகரில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இந்த கிராமத்திற்கு பேருந்து நிற்பதற்கு நிழற்குடை வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் பல மாதங்களாக முறையான குடி நீர், ஆற்றில் படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பேருந்து நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில் சில தனி நபர்களால் அந்த பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாதியில் நிறுத்தபட்ட பேருந்து நிழற்குடை பணியை தொடங்க வேண்டும், குடி நீர் வசதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டிற்கு தலைவர் போல் துண்டு அணிவித்து, கழுத்தில் கோரிக்கை பதாகையை கழுத்தில் மாட்டி ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நூதன முறையில் ஆட்சியர் பிரவின்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆட்டுடன் வந்து மனு அளிக்க வந்த கிராம மக்களால் பரப்பரப்பு ஏற்பட்டது.


