in

தத்தகிரி முருகன் கோவில் மகா வேள்வி மற்றும் சண்முக அர்ச்சனை

தத்தகிரி முருகன் கோவில் மகா வேள்வி மற்றும் சண்முக அர்ச்சனை

 

நாமக்கல் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் மகா வேள்வி மற்றும் சண்முக அர்ச்சனை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ தத்தகிரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய் அபிஷேக அன்னதான குழுவின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பக்தர்களின் நலன், அமைதி மற்றும் வளம் வேண்டி மகா வேள்வி மற்றும் சண்முக அர்ச்சனை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மகா வேள்விகள் நடைபெற்றது. இதில் ஸ்கந்த ஹோமம், சத்ரு சம்கார ஹோமம் மற்றும் மூல மந்திர ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சண்முக அர்ச்சனை நடைபெற்றது.

பின்னர் மாலை 7.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை, சுமார் 750 பக்தர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த ஆன்மிக நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்த தத்தகிரி முருகன் கோவில் அறங்காவலர் GPV ஸ்ரீ பாலன், சஷ்டி மற்றும் கிருத்திகை குழு தலைவர் ஸ்டார் ஜெராக்ஸ் ராஜேஷ், செயலாளர் பிரபு, ஸ்ரீ சக்ர பூஜை கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், விசாக கமிட்டி குழு ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, சிவன் கோவில் பிரதோஷ மற்றும் அஷ்டமி பூஜை குழு ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன்.

மேலும் மகா வேள்வி மற்றும் சண்முக அர்ச்சனை நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்த கோவில் அர்ச்சகர் சண்முகம், தத்தகிரி முருகன் செவ்வாய் அபிஷேக அன்னதான குழுவின் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, மகா வேள்வி மற்றும் சண்முக அர்ச்சனையில் பங்கேற்று முருகப்பெருமானின் அருளைப் பெற்று சென்றனர்.

What do you think?

மாம்பாக்கம் ஓம் ஸ்ரீ ஊமாரி அம்மன் கோவில் ஆடி ஜாத்திரை திருவிழா