in

புவனகிரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

புவனகிரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

 

கடலூர் மாவட்டம் புவனகிரியில் புவனகிரி அரிமா சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் அரிமா சங்க மாவட்ட நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் கிட்ட பார்வை தூர பார்வை கண்ணீர் அடுத்த நோய் உள்ளிட்ட பல்வேறு பார்வை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து 40 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவமனை சார்பில் 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று பயனாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டனர் இதில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் பங்கேற்றனர்.

What do you think?

தஞ்சாவூர் பெரியகோயில் மஹாவாராஹி அம்மன் வெண்ணெய் அலங்காரம்

வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சகாதேவன் நியமனம்