ஆஷாட நவராத்திரி வராகி அம்மன் செந்தூர காப்பு அலங்காரம்
ஆஷாட நவராத்திரியின் ஆறாம் நாள் மயிலாடுதுறை துலா கட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்கள வராகி அம்மனுக்கு செந்தூர காப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன ஆனி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
அம்மனின் போர்படை தளபதியாக விளங்கும் வராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக இது பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் அமைந்துள்ள தருமை ஆதீனத்திற்க்கு சொந்தமான ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள புகழ்பெற்ற ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

ஆறாம் நாளான இன்று நவகன்னிகா பூஜை செய்யப்பட்டு பின்னர் செந்தூர காப்பு அலங்காரமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து சோடச தீபாரதனைகளுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது.
இதில் தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அண்ண பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


