“போதை ஒழிப்பு” விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தேனியில் “போதை ஒழிப்பு” விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு.

“போதை இல்லா தமிழகம்” என்ற தலைப்பில் அண்ணாமலையின் “வீ த லீடர்ஸ்” அமைப்பு சார்பில் தேனியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே துவங்கிய இந்தப் போட்டியில் சிறுவர்கள், இளைஞர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பங்களாமேடு, பழைய பேருந்து நிலையம், அல்லிநகரம், வழியாக அன்னஞ்சி விளக்கு வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரை போட்டிகள் நடைபெற்றது.
மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனி தனியே ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


