அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய கோவிந்த பக்தர்கள்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய கோவிந்த பக்தர்கள்…..
மூன்று மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்த பக்தர்கள்……

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அம்மனி அம்மன் கோபுரம் அருகே உள்ள பக்தர்கள் காத்திருக்கும் அரையில் காத்திருந்தும், ஜிக் ஜாக் வரிசையில் நீண்ட வரிசையில் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சாமி தரிசனம் முடிந்து திருமஞ்சன கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

