பாலக்கரை ரவுண்டானாவில் ஊழல் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்
ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னோடிகள் மக்கள் இயக்கம் சார்பில் மேற்கு மாவட்ட சார்பில் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் கையெழுத்து நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னோடிகள் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட தலைவர் லாவண்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எம் ஆர் ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு ஊழலுக்கு எதிர்ப்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டும் கையை தீர்க்கத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவர் ரஞ்சித் குமார் உள்ளிட்ட கம்மாபுரம் விருத்தாசலம் ஆகிய மங்கலம்பேட்டை உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கையெழுத்து இட்டு கோஷங்கள் எழுப்பினர்.


