in

பெரும்பேர் கண்டிகை அருள்மிகு எல்லையம்மன் கோயில் ஊரணி பொங்கல்

பெரும்பேர் கண்டிகை அருள்மிகு எல்லையம்மன் கோயில் ஊரணி பொங்கல்

 

பெரும்பேர் கண்டிகை அருள்மிகு எல்லையம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி ஊரணி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகை அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாரனையும் நடைபெற்றன.

கோயிலின் எதிரே உள்ள திருக்குளம் வளாகத்தைச் சுற்றி ஏராளமான பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

மேலும், பல்வேறு வேண்டுதல்களுக்காக மொட்டை அடித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

நீண்ட வரிசையில் நின்று காலை முதல் மாலை வரை எல்லையம்மன் வழிபட்டு சென்றனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் குங்கும பிரசாதம் மற்றும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

அருள்மிகு எல்லையம்மன் குலதெய்வமாக கொண்டவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

What do you think?

ஸ்ரீ இரட்டை விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

பச்சையம்மன் ஆலயம் ஆடி மாத முதல் வெள்ளி வழிபாடு