74ம் ஆண்டு தூய கார்மேல் மலைமாதா ஆலய சகடை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கண்ணி கிராமத்தில் வேலூர் மறை மாவட்டம் சார்பில் 74ம் ஆண்டு தூய கார்மேல் மலைமாதா திருத்தலத்தின் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கண்ணி கிராமத்தில் புகழ் பெற்ற தூய கார்மேல் மலைமாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பதினொரு நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பத்தாம் நாள் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
குறிப்பாக வேலூர் மறை மாவட்டம் சார்பில் இளையாங்கண்ணி கிராமத்தில் உள்ள மலைமாதா ஆலயத்தில் கடந்த 7ம் தேதி மாதா ஆலயத்தின் முன்பாக
கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 9 நாட்களும் காலை மற்றும் இரவு வேலைகளில் மாதா ஆலயத்தில் ஏராளமான கிருஸ்துவ மக்கள் பங்கேற்று சிறப்பு திருப்பலியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் திருவிழாவான இன்று 37 அடி உயரமும், 2500 கிலோ எடை கொண்ட தேரில் தூய கார்மேல் மலைமாதா அன்னையின் திருவுருவ சிலை வைக்கப்பட்டு வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பங்கு தந்தைகள் சிறப்பு திருப்பலி முடிந்தவுடன் ஏராளமான கிருத்துவ மக்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
குறிப்பாக தூய கார்மேல் மலைமாதா ஆலயத்தை சுற்றியுள்ள மாட வீதியில் சுற்று பிரகாரம் வந்து தேர் இன்று இரவு நிலையை அடையும். மேலும் நாளை பதினாறாம் நாள் விழாவில் கொடியேற்றமானது கீழே இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.
