in

பாலக்கரை ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தில் அஷாட நவராத்திரி விழா

பாலக்கரை ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தில் அஷாட நவராத்திரி விழா

 

மயிலாடுதுறை பாலக்கரை ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தில் அஷாட நவராத்திரி விழா இன்று தொடக்கம்.

மயிலாடுதுறை, பாலக்கரையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ விசாலாட்சி சமேத படித்துறை ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்தில், ஸ்ரீ வெற்றி வாராஹி அம்பாளுக்கு ஆஷாட நவராத்திரி விழா விமர்சையாக தொடங்கியுள்ளது.

ஜூலை 15-ம் தேதி முதல் ஜூலை 23-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற உள்ளன.

ஆடி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரி, வாராஹி அம்மனை வழிபடுவதற்குரிய மிக விசேஷமான காலமாகும். கடன் பிரச்சனை, பொருளாதார நெருக்கடி, எதிரிகள் தொல்லை, வழக்குகள் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் இந்த 9 நாட்களில் வாராஹி தேவியை மனமுருகி வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்வில் மாற்றமும் வளமும் உண்டாகும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

விழாவின் போது அம்மனுக்கு பிடித்தமான கிழங்கு வகைகள், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், மாதுளம் பழம் மற்றும் பல்வேறு இனிப்பு வகைகள் நெய்வேத்தியமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த ஆஷாட நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

What do you think?

மங்கைமடம் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிய முதியவர் மயங்கி விழுந்து பரிதாப சாவு

மாதாந்திர பூஜைக்காக இன்று (16.07.26) மாலை சபரிமலை நடை திறப்பு!