in

நெல் கொள்முதல் தீவிரம்: விவசாயிகளின் கணக்கில் ₹353 கோடி வரவு

நெல் கொள்முதல் தீவிரம்: விவசாயிகளின் கணக்கில் ₹353 கோடி வரவு

 

இதுவரை 1.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தினமும் 600 லாரிகள் மூலம் நெல் அரவைக்கு அனுப்பபட்டு வருகிறது. 353 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோடை பருவத்தில் மூன்று லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 403 நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் 1.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 1.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 500 முதல் 600 லாரிகள் மூலம் நெல் மணிகள் அரவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

நெல்லை கொள்முதல் செய்வதற்காக 33 லட்சம் சாக்குகள், 33,000 கிலோ சணல் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 25,400 விவசாயிகளுக்கு நெல்லுக்கான தொகை 353 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

What do you think?

தஞ்சை பெரியகோவில் மஹாவாராஹி அம்மன் சிறப்பு அபிஷேகம்

பொதுமக்களின் நலன் கருதி தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு