in

 வியாழன் சாய் பாபா சிறப்பு வழிபாடு

 வியாழன் சாய் பாபா சிறப்பு வழிபாடு

 

ஓசூர் ஏரி தெரு ஸ்ரீ சாய் பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு ஆரத்தியில் பங்கேற்று பக்தர்கள் தரிசனம்!

அபிஷேகம், சிறப்பு பூஜைகள், ஆரத்தி – சாய் பாபா பக்தர்கள் வழிபாடு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏரி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாய் பாபா திருக்கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, சாய் பாபா சுவாமிக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, இரவு நேர வழிபாட்டின் ஒரு பகுதியாக ஷேஜ் ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஓசூர் ஏரி தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய் பாபாவை தரிசனம் செய்து அருள் பெற்றனர். கோவில் முழுவதும் பக்தி மயமாகக் காணப்பட்டது.

What do you think?

அதிக மகசூல் கிடைத்திட வேண்டி வினோத வழிபாடு செய்த விவசாயிகள்

ஜோதி பிழம்பாய் காட்சி அளிக்கும் அண்ணாமலையார்