in

நாகை ONGC நிறுவனத்தை கண்டித்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!​

நாகை ONGC நிறுவனத்தை கண்டித்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!


​நாகப்பட்டினத்தை அடுத்த நரிமணத்தில் உள்ள ONGC (மத்திய அரசு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) நிறுவனம் முன்பு, ஓய்வுபெற்ற பாதுகாவலர்கள் தங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது, பொதுமக்களின் நலன் மற்றும் நிறுவனத்தின் அவசரத் தேவைகளைக் கருதி 453 பாதுகாவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் (Over Time) பணிபுரிந்தனர்.

இதற்காக அவர்களுக்கு கூடுதல் பணி நேரத்திற்கான ஊதியம் (Overtime Wages) வழங்கப்படும் என ONGC நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஆணை பிறப்பித்திருந்தது.

இருப்பினும், பணி நிறைவு பெற்று ஓய்வு பெற்ற 33 ஊழியர்களுக்கு இதுவரை அந்த ஊதியத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவிதமான சுமுக முடிவும் எட்டப்படவில்லை.

நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தங்களுக்குரிய ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும் நரிமணம் ONGC வளாகத்தின் நுழைவாயில் முன்பு ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் திரண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு மனித உரிமை போராளி காளிதாஸ் சமூக ஆர்வலர்கள் ராஜேஷ், ஆறுமுகம், பக்கிரிசாமி, கண்ணதாசன், எழில் மாறன், தினேஷ்குமார், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விஜயராஜ், கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கண்டன உரையாற்றினர் மேலும் உடனடியாக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

What do you think?

சோழியக்குடியில் ஏழையின் குடிசைக்குத் தீ வைப்பு: ஆவணங்கள் எரிந்து சாம்பல் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு