கோவையில் மறைந்த நடிகர் பாக்யராஜ் வழியில், விழிகள் தானம்
கோவையில் மறைந்த நடிகர் பாக்யராஜ் வழியில், விழிகள் தானம் வழங்குவதை வலியுறுத்தி 150 க்கும் மேற்பட்டோர் கண் தானம்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் அழியாத விழிகள் எனும் தலைப்பில், மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் சார்பாக, மறைந்த நடிகர் பாக்யராஜ் வழியில், விழிகள் தானம் வழங்குவதை வலியுறுத்தி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக முதற்கட்டமாக சுமார் 150க்கும் மேற்பட்ட மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், மற்றும் பாக்யராஜ் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் இணைந்து தங்களது கண்களை தானம் வழங்குவதாக ஒப்புதல் அளித்தனர். அவர்களுக்கு இதற்கான சான்றிதழ்கள் வழங்கபட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முரளி தரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது..
மறைந்த, திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் அவர்களின், நினைவை போற்றும் வகையில்,இன்று முதற்கட்டமாக சுமார், 150க்கும் மேற்பட்டோர் தங்களது கண்கள் தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள் கண்களை தானமாக பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கி அதில் முறையாக பதிவு செய்து அந்த விண்ணப்பங்களை மருத்துவர்கள் பெற்றுள்ளனர்.
இந்த திட்டம் இன்னமும் விரிவு படுத்தி, அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளை நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இன்னும் அதிகமான கண்களை தானமாக பெற்று, கண் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்ற மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் துணை நிற்க்கும் என்றார்.

மேலும் நமது அமைப்பு சார்பாக, தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம், ஏழை எளிய குழந்தைகளின் படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, என
கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்து வருகின்றோம்.
மேலும் ஏழை எளிய மக்கள் மற்றும் வீடற்றோர்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் குறைந்த விலையில் வீட்டு மனை திட்டங்களை அறிமுகம் செய்து வீட்டு மனைகளை வழங்கி வருகின்றோம்.
தொடர்ந்து இரத்த தானம் வழங்கி வருகிறோம். இன்று முதல் கண்தானம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்
குட்டி ஸ்டோரி ஸ்பிக்சர்ஸ் பட தயாரிப்பாளர் புவனேஸ் சின்னசாமி, ஸ்ரீ மான் சுந்தரம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

