தாய் கண்டிப்பால் இளைஞர் விபரீத செயல்
செஞ்சி அருகே போதைக்கு அடிமையாகி சுற்றித்திரிந்த மகனை தாய் கண்டித்ததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த இளைஞர்.
ஆபத்தான நிலையில் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வடபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துக்குமார் – விஜயலட்சுமி(45) தம்பதிகளுக்கு முகேஷ் குமார்(23) ராகேஷ் குமார்(20) என இரண்டு மகன்கள் உள்ளனர். தந்தை முத்துக்குமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தாய் விஜயலட்சுமி வளர்ப்பில் இரண்டு மகன்களும் படித்துள்ளனர்.
மூத்த மகன் முகேஷ்குமார் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ராகேஷ் குமார் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த நிலையில், மேற்கொண்டு படிக்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மது பழக்கத்திற்கு அடிமையாக சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றும் போதையில் இருந்த மகன் ராகேஷ் குமாரை தாய் விஜயலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் போதையில் இருந்த ராகேஷ் குமார் வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.
இதில் உடல் முழுக்க தீக்காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த முகேஷ் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


