சீர்காழியில் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயிலடி சாலையில் உள்ள மார்கோனி மந்திராலயா கார்டனில் வேல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தமிழ்ச் சங்கத் தலைவர் மார்கோனி ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவையொட்டி, வேல் வடிவில் அமைந்துள்ள ஆலயத்தில் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்புப் பூஜைகள் செய்து திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் சுவாமியை பக்தியுடன் வழிபட்டு தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாக மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


