in

தேவூர் அருள்மிகு மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வர் சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா

தேவூர் அருள்மிகு மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வர் சுவாமி கோவில் சூரசம்ஹார விழா

 

நாகை அருகே தேவூர் அருள்மிகு மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வர் சுவாமி கோவிலில் பக்தர்களின் வின்னை பிளந்த “முருகனுக்கு அரோகரா” முழக்கத்தோடு சூரபத்ம அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் அருள்மிகு மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தனி சன்னதி கொண்டு அருள்பாளித்து வருகிளார். இக் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம் கடந்த 10ம் தேதி தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய முருக பெருமான் சூரபத்மனை வதம் செய்தார்.

வேல் கொண்டு சூரபத்மன் சிங்கம், யானை தலைகளை வெட்ட , வெட்ட தலைகளை கொய்து கடைசியாக பக்தர்களின் வின்னதிரும் “முகருகனுக்கு அரோகரா” முழக்கத்தோடு சூரபத்மன் தலையை கொய்து வதம் செய்தார். சாந்தமான முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மயில் வாகனத்தில் முருகப்பெருமான எழுந்தருளி மங்கள இசை, கைலாய வாத்தியங்கள் முழங்க வீதிஉலா காட்சி நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிப்பட்டனர்.

What do you think?

 வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்

மயிலம் முருகன் கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சி