இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் என்எல்சி நிர்வாகம்
குடியிருப்பு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
நெய்வேலி என்எல்சி நிறுவனம் முதல் சுரங்கம் முதல் சுரங்க விரிவாக்கம் இரண்டாவது சுரங்கம் என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டாவது சுரங்கத்திலிருந்து நிலக்கரி வெட்டி எடுத்து நீயூ தர்மலுக்கு மந்தாரக்குப்பம் பகுதியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் குடியிருப்பு பகுதி வழியாக லாரியின் மூலம் நிலக்கரி எடுத்து செல்வதால் அப்பகுதி உள்ள வீடுகள் முழுவதும் நிலக்கரி துகள்கள் மற்றும் புழுதி படிவதால் குடிநீர், உணவு மற்றும் வீடு முழுவதும் நிலக்கரி துகல்கள் புழுதி படிந்து வருகிறது.

இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமடைந்தும் அடிக்கடி விபத்து நடைபெற்றும் வருகிறது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலமுறை என்எல்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இன்று விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்பு என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து அதே பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


