in

அண்ணா மிதிவண்டி போட்டி தொடக்கம்! மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

அண்ணா மிதிவண்டி போட்டி தொடக்கம்! மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது இந்த போட்டியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டை கையில் எடு, போதையை விடு என்ற தலைப்பின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா மிதிவண்டி போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவண்ணாமலை மாநகரம் அடிஅண்ணாமலை பகுதியில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 13 வயது, 15 வயது, 17 வயது ஆகிய பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அடிஅண்ணாமலை பகுதியில் தொடங்கிய இந்த மிதிவண்டி போட்டியானது கோசாலை, காஞ்சி சாலை, கிரிவலப் பாதை, இடுக்கு பிள்ளையார் கோவில், அண்ணா நுழைவாயில், மின் நகர், வானவில் நகர் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த போட்டி நிறைவு பெற்றது. குறிப்பாக 15 கிலோமீட்டர் முதல் 20 கிலோமீட்டர் வரையில் இந்த போட்டியானது நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ஐந்தாயிரம், இரண்டாம் பரிசு 3 ஆயிரம், மூன்றாம் பரிசு 2000 என மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நாளை மாணவிகளுக்கு மட்டும் மிதிவண்டி போட்டியானது நடைபெற உள்ளது.

What do you think?

 புல்தரை பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை திறப்பு

பறவைக் காச்சல் பிராய்லர் கோழிகள் அழிப்பு