அருள்மிகு அபிராமி அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் நாயகன பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது.
யாகசாலை பூஜையில் விநாயகர் சிவன் அம்மன் முருகர் இவர்களுக்கு யாகசாலை பூஜையில் தீபம் காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஆரத்தி தொட்டு வணங்கி சிவன் அருளை பெற்றனர்.

அதன் பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காஞ்சி சங்க பறவை இன்னிசை பக்தி நிகழ்ச்சியானது நடைபெற்றது.
பொதுமக்கள் உற்சாகமாக பக்தி பாடல்களை கேட்டு ரசித்தனர்.

