in

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்.

 

டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 10,417 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பணார் கோவில் ஆகிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்து வைத்த பருத்தியை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் இ-நாம் முறையில் மறைமுக ஏலத்தில் விலை நிர்ணயம் செய்து பருத்தியை கொள்முதல் செய்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இணைப்பு பாலமாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு பருத்தி ஏலத்தை நடத்துகின்றது.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 618 விவசாயிகள் 1500 குவிண்டால் பருத்தியை கொண்டு வந்து வைத்தனர்.

அதனை மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், அரியலூர்,கரூர், பண்ருட்டி, விழுப்புரம், தேனி, கும்பகோணம் உள்பட தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பருத்தி பஞ்சுகளை பார்வையிட்டு குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.9,809 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.8,502 க்கும், சராசரி விலையாக ரூ.8,950 க்கும் விலை போனது. 

What do you think?

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இடம் பிடித்த மாணவிகள்

மயிலாடுதுறையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்