in

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இடம் பிடித்த மாணவிகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இடம் பிடித்த மாணவிகள்

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை 2026 ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 பேர் மாணவிகள் இடம் பிடித்து உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2026ம் ஆண்டு இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் R.வினோத் வெளியிட்டார்.

இந்த கல்வி ஆண்டில் இளம் அறிவியல் மாணவர்கள் சேர்க்கைக்காக இணைய வழி மூலம் 14 பாட பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இதன் மூலம் 26 709 விண்ணப்பங்கள் பெறப்பட்டன அதில் 24,435 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன இவர்களில் 15 757 பெண்கள் ஆவார்கள்.

அரசு கல்லூரிகளில் 2 856 இடங்களுக்கும் தனியார் இணைப்பு கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டான 3051 இடங்களுக்கும் இணைய வழி மூலம் கலந்தாய்வு நிரப்பப்பட்டன.

இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த மெர்லின் என்ற மாணவியும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாதவராஜன் என்ற மாணவரும் 200 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்

முதல் 10 இடங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டன. இதில் 6 பேர் பெண்கள் ஆவார்கள்.

What do you think?

புவனகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்